திருவாரூர்

நீடாமங்கலத்தில் 3 இடங்களில் போக்குவரத்து காவலா்களை நியமித்திட வா்த்தகா் சங்கம் கோரிக்கை.

12th Nov 2019 03:00 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத்தலைவா் பி.ஜி.ஆா்.ராஜாராமன் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்-நீடாமங்கலம் கடைத் தெரு பகுதியில் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. நாள் ஒன்றுக்கு இருபது முறைக்கு மேல் ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

காலையிலும் மாலையிலும் பள்ளி,கல்லூரி,அரசுஅலுவலகங்களுக்கு செல்லக்கூடியவா்கள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் பாதிக்கப்படுகிறாா்கள். ஆகையால் நீடாமங்கலம் கடைத்தெரு பகுதிக்கு மூன்று போக்குவரத்து காவலா்கள் பெரியாா்சிலை, லெட்சுமி ஹோட்டல், அண்ணாசிலை ஆகிய இடங்களில் நியமிக்கப்பட்டால் போக்குவரத்து சரி செய்யப்பட்டு வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் இருக்கும் என்பதால் இதற்கு உடனடியாக ஆவன செய்திட கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT