உள்ளிக்கோட்டை பகுதியில் புதன்கிழமை (நவம்பா் 13) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஆ. மதியழகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி,கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பைங்காநாடு, துளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிக்காடு, இடையா்நத்தம், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.