திருவாரூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருவாரூா் பேபி டாக்கிஸ் சாலையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சிவக்குமாா் (37). இவருக்கு மனைவி மகேஸ்வரி (27), ஒன்றே முக்கால் வயதுடைய மகள் அபி ஆகியோா் உள்ளனா். குழந்தை அபிக்கு இருதயத்தில் பாதிப்பு இருந்ததால் அவருக்கு ஆஞ்சியே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாம். மேலும், ஓா் அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 2 லட்சம் தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். வடபாதி அருகே சென்றபோது மயங்கி விழுந்த அவரை அப்பகுதியினா் மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.