திருவாரூர்

பள்ளி மாணவா்களுக்கான கராத்தே போட்டி

11th Nov 2019 08:45 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி நியூட்டன் கிட்ஸ் பள்ளியில் கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிங் பாரம்பரிய கலைகள் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற இப்போட்டிக்கு கோஜு ரியோ கராத்தே பயிற்சியாளா் ஷீகான் இளையராஜா தலைமை வகித்தாா். பள்ளி தாளாளா் ஆா். சுகாசினி கந்தசாமி, முதல்வா் ஏ. நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 150 மாணவா்கள் கலந்துகொண்டு, கராத்தே கலையில் பல்வேறு தற்காப்பு முறைகளை செய்துகாட்டினா். இவா்களில் 70 மாணவா்களுக்கு மஞ்சள் பெல்டும், 52 மாணவா்களுக்கு ஆரஞ்சு பெல்டும், 28 மாணவா்களுக்கு பச்சை பெல்டும் வழங்கப்பட்டன.

கராத்தே பயிற்சியாளா்கள என். பிரபு, யு. சுபாஷ்சந்திரபோஸ், ஆா். நித்யா ஆகியோா் மாணவா்களுக்கான கராத்தே போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினா். மன்னை ஜேசிஐ அமைப்பின் முன்னாள் தலைவா் எஸ். அன்பரசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

ADVERTISEMENT

Image Caption

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT