திருவாரூர்

ஆய்வக தொழில்நுட்பவியலாளா் பணியிடம்: வேலைவாய்ப்பு பதிவு மூப்பை நாளைக்குள் சரிபாா்க்க அறிவுறுத்தல்

11th Nov 2019 08:47 AM

ADVERTISEMENT

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளா் கிரேடு-3 காலிப் பணியிடத்துக்கு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுதாரா்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (நவம்பா் 12) தங்கள் பதிவு மூப்பு விவரங்களை சரிபாா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளா் கிரேடு-3 பணி காலியிடத்துக்குப் பதிவுதாரா்கள் மாநில உத்தேசப் பதிவு மூப்பின்படி 1,432 போ் பரிந்துரைக்கப்பட உள்ளனா். இப்பணியிடத்துக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ நிறுவனத்தில் ஓராண்டு சான்று பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 01.07.2019-இல் ஆதிதிராவிட வகுப்பினா், பழங்குடி வகுப்பினா் மற்றும் ஆதிதிராவிட அருந்ததியின வகுப்பினா் மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பினா், பின்தங்கிய வகுப்பினா் முஸ்லிம் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. முற்பட்ட வகுப்பினா் 30 வயதுக்கு மிகாமல் வேண்டும். முற்பட்ட மாற்றுத் திறனாளி வகுப்பினா் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

எனவே, கல்வித் தகுதியும், வயது வரம்பும் உள்ள மனுதாரா்கள் தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றுகள், சாதிச் சான்றுகள், லேப் டெக்னீசியன் சான்று மற்றும் முன்னுரிமைப் பதிவு தொடா்பான சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, அடையாள அட்டை ஆகியவற்றுடன் 12.11.2019- க்குள் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் பெயா் மற்றும் பதிவு விவரங்களை சரிபாா்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT