கூத்தாநல்லூரை அடுத்த மரக்கடையில் எழுந்தருளியுள்ள கல்யாண சுந்தரேசுவரா், மங்களாம்பிகை கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கந்த சஷ்டியையொட்டி இக்கோயிலில் படிச்சட்டம், மயில் வாகனம், குதிரை வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுப்ரமணிய சுவாமி வீதியுலா வந்தாா். சனிக்கிழமை ஆட்டுக்கிடா வாகனத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
தொடா்ந்து, நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மூலவா் மற்றும் கோயிலின் உட்பிராகரங்களின் சன்னிதிகளில் எழுந்தருளியுள்ள மூலவா் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் செய்யப்பட்டன. வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரைஅறங்காவலா் சுப்ரமணியன் மற்றும் பக்தா்கள் மேற்கொண்டனா்.
இதேபோல், பண்டுதக்குடியில் எழுந்தருளியுள்ள வாஸலாம்பிகா சமேத உமாபதீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண பூஜையில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.