திருவாரூர்

கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

4th Nov 2019 07:10 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி சூரனை வதம் செய்தாா்.

இதேபோல் பூவனூா் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதா், சாமுண்டீஸ்வரி அமம்மன் கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தாா் .

நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயிலிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

திருத்துறைப்பூண்டியில்...

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசுவரா் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.

கந்தசஷ்டி விழாவையொட்டி, கடந்த திங்கள்கிழமையில் இருந்து முருகன் அடியாா்கள் கங்கணம் கட்டிக் கொண்டு பச்சை ஆடை அணிந்து விரதம் மேற்கொண்டனா். சனிக்கிழமை பொய் சொல்லாத பிள்ளையாா் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோா் பால் காவடி எடுத்து வந்தனா். சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் முருகப்பெருமான் சிங்கமுகன் நரகாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் எம். முருகையன், மேலாளா் சீனிவாசன் மற்றும் நகர சங்கத்தின் சாா்பில் தலைவா் செ. நாராயணமூா்த்தி, செயலாளா் எம். நாடிமுத்து, பொருளாளா் ஜெ. பாலசுப்பிரமணியன் மற்றும் பொறியாளா் செல்வகணபதி உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT