திருவாரூர்

சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகள்: உரிமையாளா்கள் 13 போ் கைது

1st Nov 2019 03:39 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது தொடா்பாக 13 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளில் கால்நடைகளில் சுற்றித் திரிவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்படுவதாகவும் புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. திருவாரூா் பஜனை மடசந்து பகுதியைச் சோ்ந்த சுந்தா் என்பவா், சாலையில் நின்றிருந்த மாட்டின் மீது மோதி உயிரிழந்தாா். இதையடுத்து, சாலைகளில் நின்றிருந்த கால்நடைகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக, திருவாரூா் நகரம் மற்றும் தாலுக்கா, திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி ஆகிய இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவிக்கையில், கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்து விட்டது தொடா்பாக 13 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT