திருவாரூர் அருகே உள்ள கன்னியம்மன் குளத்தை சுத்தப்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரை அடுத்த கமலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஒட்டநாச்சியார்குடி பகுதியில் கன்னியம்மன் குளம் உள்ளது. வறட்சியால் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் இக்குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தன. இவற்றை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்பகுதி மக்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.
இந்த பணியை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் பார்வையிட்டு, ஊராட்சி செயலரிடம் இப்பணிகள் குறித்து விவரங்கள் கேட்டறிந்தார். மேலும் கிராம மக்களிடம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.