கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, திருத்துறைப்பூண்டி வர்த்தகர் சங்கம் சார்பில் 30 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, வீடுகளுக்கு கூரை வேயப்படாமல் இருந்த மன்னைசாலை, மடப்புரம், பாமணி உள்ளிட்ட பகுதிகளில் 30 பயனாளிகளுக்கு வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வர்த்தகர் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
முன்னாள் தலைவர் என்.எஸ்.பி. சின்னப்பா முன்னிலை வகித்தார். முன்னாள் செயலாளர்கள் ஆதப்பன், பாலு, முன்னாள் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், செயலாளர் கணபதி, துணைத் தலைவர் ஜபருல்லா, பொருளாளர் ராமசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.