பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி மேட்டுத் தெருவில் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். பிஎஸ்என்எல் தொழிற்சங்க கிளைச் செயலாளர் கே. தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். எம். அறிவழகன் முன்னிலை வகித்தார்.
இதில், ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து
கொண்டனர்.