திருவாரூர்

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

31st Jul 2019 08:43 AM

ADVERTISEMENT

நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தாக்கப் பயிற்சி நன்னிலம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. 
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை தமிழ் பாடத்துக்கான பயிற்சி நடத்தப்பட்டது. இது மூன்றாம் கட்ட பயிற்சி ஆகும். மொத்தம் 240 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை 70 தொடக்க நிலை ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ம. கவிதா தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் எம். கெளரி, சமத்துவபுரம் ஆசிரியர் ஏ.மேரி பெலிசிட்டா ஆகியோர் பயிற்சியளித்தனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆர். நடேசதுறை நன்றி கூறினார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT