திருவாரூர்

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

31st Jul 2019 08:41 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டியில் மன்னை சாலையில் திங்கள்கிழமை இரவு கூரை வீட்டில் தீப்பிடித்ததில் வீட்டு உபயோகப் பொருள்கள் முழுவதுமாக நாசமாகின.
திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் வெட்டுக்குளத் தெருவில் வசிப்பவர் பாஸ்கர் மனைவி சுகந்தி (42). இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் திங்கள்கிழமை இரவு தீப்பிடித்து. இதைத்தொடர்ந்து, வீட்டில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். தீயணைப்பு நிலைய அலுவலர் ச. நடராஜன் தலைமையில் தீயணைப்புப் படைவீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டி, கட்டில், பீரோ உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் நாசமாகின.  
வட்டாட்சியர் ராஜன் பாபு நிகழ்விடத்தை பார்வையிட்டு, அரசு சார்பில் உதவித் தொகை ரூ.5000 மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ரூ.20,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை தலைவர் எஸ்.சிவகுமார், செயலாளர் மாணிக்கவாசகம், பொருளாளர் சி.செல்வகுமார் ஆகியோர் வழங்கி ஆறுதல் கூறினர். திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT