மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் அபயாம்பாள் அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை சர்க்கரைப் பாவாடை உத்ஸவம் நடைபெற்றது.
இதையொட்டி, அபயாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்பாளின் முன்பு சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு, அதில் நெய் நிரப்பப்பட்டது. சர்க்கரைப் பொங்கலில் நிரப்பப்பட்ட நெய்யில் தெரிந்த அம்பாளின் உருவத்தை கண்டு, திரளான பக்தர்கள் பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்தனர்.