நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மறைந்து முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவு தின கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு " ஏவுகனை நாயகனின் சாதனைகள்" எனும் தலைப்பில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. நல்லாசிரியர் டி. பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திங்கள்கிழமை பள்ளியில் நடைபெற்ற மாணவர் பிரார்த்தனை கூட்டத்தில் அக்னிசிறகுகள் புத்தகமும், சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் ந. செந்தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.