தார்ச்சாலை அமைக்கக் கோரி வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், நத்தம் பாலத்திலிருந்து வேதாம்புரம் ஆதிதிராவிடர் தெரு வரையிலான சாலையை தார்ச்சாலையாக அமைக்க வேண்டும், வேதாம்புரம் ஆதிதிராவிடர் தெரு மற்றும் விருப்பாட்சிபுரம் ஊராட்சி பாதிரிபுரம் தெருவுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க இந்தியா மார்க்-2 குழாய்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், கிளைச் செயலர்கள் ஜி. சுரேஷ் (வேதாம்புரம்), ஆர். பரமகுரு (பாதிரிபுரம்), ஒன்றியச் செயலர் எம். ராதா, நகரச் செயலர் எஸ். சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.