திருவாரூர்

வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

19th Jul 2019 12:34 AM

ADVERTISEMENT


ருவாரூரில் வியாழக்கிழமை, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பணியாற்றும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலத்துறை அலுவலகத்தின் தலைமை அலுவலர், தனக்குகீழ் பணியாற்றும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக சேர்ந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீற முயற்சித்ததாகவும், இதையடுத்து அவர் வேறு இடத்துக்கு மாறுதல் பெற்று சென்ற நிலையில், தொடர்ந்து அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், மன உளைச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், எனவே அந்த அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் செயலர் எஸ். அசோக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் வி. சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் எஸ். ஜெகதீசன், மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமார், மாவட்ட இணைச் செயலர் ரத்னவேலு உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT