திருவாரூர்

திருவாரூரில் மழை

18th Jul 2019 12:22 AM

ADVERTISEMENT


திருவாரூரில் புதன்கிழமை மாலை மழைபெய்தது.
திருவாரூரில் பகல் முழுவதும் மந்தமான வானிலை நிலவிய நிலையில் மாலையில் மழை பெய்தது. இதனால் மாலை நேரத்தில் பணி முடிந்து சென்ற பலரும் மழையில் நனைந்தபடியே சென்றனர்.கடந்த சில நாள்களாக வெப்பமான சூழல் நிலவிய நிலையில், மாலையில் பெய்த மழை திருவாரூர் மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. மழை காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
நன்னிலத்தில்...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் புதன்கிழமை மாலை சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. 
நன்னிலம், கங்களாஞ்சேரி, சொரக்குடி, ஆண்டிபந்தல் பகுதியில்  பரவலாக மழை பெய்தது. பள்ளி, கல்லூரி விட்டு வந்த மாணவ, மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே வீடுகளுக்குச் சென்றதைக் காண முடிந்தது. நீண்ட நாள்களுக்குப் பின்னர் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT