திருவாரூர்

140 மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி

16th Jul 2019 10:04 AM

ADVERTISEMENT

திருவாரூரில் 140 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 டி. ஜெகநாத உடையார் மற்றும் டி. நடராஜ உடையார் நினைவு அறக்கட்டளை சார்பில் 140 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை காசோலையாக சுமார் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். நாராயணி நிதி நிறுவனத் தலைவர் கார்த்திகேயன், வேலுடையார் கல்வி நிறுவனத் தாளாளர் கே.எஸ்.எஸ். தியாகபாரி, ஏகேஎம் குழுமத் தலைவர் செந்தில், வர்த்தகர் சங்கத் தலைவர் சிஏ. பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெ. கனகராஜன், ஜெ. ரவிச்சந்திரன், என். ஜெய்கணேஷ் மற்றும் எஸ்விடி ஊழியர்கள்
செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT