நீடாமங்கலம் அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பெண் உயிரிழந்தார்.
நீடாமங்கலம் அருகேயுள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு மகன் சதாசிவம் (45). நீடாமங்கலம் மேலக்கடம்பூரைச் சேர்ந்த பழனி மனைவி உஷா (35). இவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
ராயபுரம் - காளாஞ்சிமேடு பகுதியில் வரும்போது, அந்த வழியாக வந்த மினி லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உஷா உயிரிழந்தார். நீடாமங்கலம் போலீஸார், உஷாவின் சடலத்தை உடல் கூராய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சதாசிவம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து, நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.