திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு அப்பகுதி மக்கள் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்களை (சீர்வரிசை) வெள்ளிக்கிழமை வழங்கினர்.
முன்னதாக, இந்த சீர்வரிசைகளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளியில் ஒப்படைத்தனர். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகழாண்டில் புதிதாக சேர்ந்துள்ள 85 மாணவர்களை, பழைய மாணவர்களும், ஆசிரியர்களும் பரிவட்டம் கட்டி வரவேற்றனர். இதில், அனைருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் திட்ட அலுவலர் கலைவாணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் ஈவெரா, பள்ளித் தலைமை ஆசிரியர் குணசேகரன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கிருபா, மணிவண்ணன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.