திருவாரூர்

மின் மோட்டார்கள் பறிமுதல்

4th Jul 2019 08:44 AM

ADVERTISEMENT

நன்னிலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. 
 நன்னிலம் பேரூராட்சிக்குள்பட்ட மாப்பிள்ளைக்குப்பம், நன்னிலம் போன்ற பல்வேறு கிராமங்களில் குடிநீர் குழாய்களில் சட்டவிரோதமாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், நன்னிலம் பேரூராட்சி அலுவலர்கள் பேரூராட்சிக்குள்பட்ட தூத்துக்குடி கிராமத்தில் சோதனை செய்தபோது நான்கு இடங்களில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பதை அறிந்து, மின்மோட்டாரை பறிமுதல் செய்தனர். அப்போது நன்னிலம் பேரூராட்சியின் செயல் அலுவலர்  கு.ரா.முருகேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT