திருவாரூர்

சட்டவிரோத மின் இணைப்பு: 12 மின் மோட்டார்கள் பறிமுதல்

4th Jul 2019 08:47 AM

ADVERTISEMENT

வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சட்டவிரோதமாக இணைப்பு கொடுத்திருந்த 12 மின்மோட்டார்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சிக்குச் சொந்தமான குடிநீர் இணைப்பில் 12 குடியிருப்பு வீடுகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், 12 மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர். 
சட்டவிரோத மின் மோட்டார் இணைப்பு குறித்து அறிந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT