திருவாரூர்

கோயில் சிற்பச் சிலைகள் சேதம்: 3 பேரிடம் விசாரணை

4th Jul 2019 08:46 AM

ADVERTISEMENT

திருவாரூர் அருகே கோயில் கோபுர சிற்பங்களை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக 3 சிறுவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவாரூர் அருகே தொழுவனகுடி பெரியநாயகி  அம்மன் கோயிலில், ஓராண்டாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயில் கோபுர சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்த புகாரின்பேரில், திருவாரூர் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
மேலும், சிற்பச் சிலைகள் சேதப்படுத்தியது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்களிடம் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT