திருவாரூர்

சீல் வைக்கப்பட்ட கோயிலை திறக்கக் கோரி மனு

2nd Jul 2019 07:22 AM

ADVERTISEMENT

திருவாரூர் அருகே இருதரப்பு பிரச்னை காரணமாக 3 மாதங்களாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள கோயிலை மீண்டும் திறக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே வண்டாம்பாளை பகுதியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, சுவாமி ஊர்வலம் எடுத்துச் செல்வதில் இருதரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததாலும், பிரச்னை நடந்தபோது தேர்தல் நேரம் என்பதாலும், கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்திடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: சீல் வைக்கப்பட்டு 3 மாத காலமாகியும் கோயில் திறக்கப்படாததால், சுவாமியை வழிபட முடியாமல், சுப காரியங்களை கோயில் வாசலிலே நடத்தி வருவதாகவும், இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே, கோயிலை விரைவில் திறந்து வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT