திருவாரூர்

சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி

2nd Jul 2019 07:20 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் கொரடாச்சேரி வட்டம், மாங்குடி கிராமத்தில் சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. 
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர்  ராஜா ரமேஷ்,சிறுதானியங்களை பாதிக்கும் பூச்சிகளை பற்றியும், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் விரிவாக கூறினார். நிலைய விஞ்ஞானி உழவியல் துறை பயிற்சி உதவியாளர்
ஆ. ராஜேஷ்குமார், காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறுதானியங்களில் பயிர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை பற்றி கூறினார்.  உணவியல் துறை பயிற்சி உதவியாளர் ஜெ.வனிதாஸ்ரீ பேசும்போது, 'சிறுதானியங்களை உட்கொள்ளுவதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம் மற்றும் புற்றுநோய் வருவதை கட்டுப்படுத்தலாம். சிறுதானியங்கள் சாப்பிடும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். இப்பயிற்சியின் நோக்கமானது பெண்கள் சுயதொழில் செய்வதற்கும் மற்றும் வருமானத்தை பெருக்குவதற்கும் ஆகும் என்றார் அவர். 
இப்பயிற்சியில் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்  ரேகா, இளநிலை ஆராய்ச்சியாளர் சுரேஷ் மற்றும் சமீர் உசேன் ஆகியோர் கலந்துகொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
இப்பயிற்சி முகாமில், சிறுதானியங்களிலிருந்து இனிப்பு பொங்கல் பாயசம் மற்றும் பிஸ்கட் தயாரிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.  இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு குதிரைவாலி விதை கோ 2 மற்றும் எம்டியு 1 மற்றும் மண்புழு உரமும் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு சிறுதானியங்களிலிருந்து மதிப்புக்கூட்டுதல் கையேடும் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் 40 விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT