வலங்கைமானில் ஞாயிற்றுக்கிழமை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு தொடங்கப்பட்டது.
அமைப்பின் நீடாமங்கலம் நகர அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சி. செந்தில்குமார், ராம. கந்தசாமி, இயற்கை விவசாயி எஸ். சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. ராஜவேலு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில், மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசுக் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜி. சத்தியாதேவி, பாரம்பரிய நெல் ரகங்கள் சேகரிப்பாளர் பசுமை எட்வின், இயற்கை மருத்துவர் தஞ்சை எ. சண்முகவடிவேலன், சமூக ஆர்வலர்கள் எம். கண்ணன், அப்துல் காதர், கிரீன் நீடா-வலங்கைமான் அமைப்பாளர் கே.குலாம் மைதீன், இணை அமைப்பாளர் டி. அன்வர் பாட்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.