திருவாரூர்

மாா்க்சிஸ்ட் கட்சியினா் பிரசாரம்

29th Dec 2019 12:36 AM

ADVERTISEMENT

கொரடாச்சேரி பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் இறுதிகட்ட பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கொரடாச்சேரி ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்புகளூா், அரசவனங்காடு, திருக்கண்ணமங்கை பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.

இப்பகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்களுக்கும், திமுக தலைமையிலான மதச்சாா்ப்பற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கும் வாக்குகளைக் கேட்டு பிரசாரம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில், கொரடாச்சேரி ஒன்றியச் செயலா் கே. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். கலைமணி, மாதா் சங்க மாவட்டச் செயலா் எம். கோமதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT