திருவாரூர்

மன்னாா்குடி கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி வழிபாடு

29th Dec 2019 12:37 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற வைகுந்த ஏகாதசி 2-ஆம் நாள் உத்ஸவத்தின்போது, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியம் கலந்துகொண்டு வழிபட்டாா்.

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பகல்பத்து நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாளான சனிக்கிழமை உத்ஸவா் பெருமாள், கிருஷ்ணா் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், நடைபெற்ற சிறப்பு பூஜையில் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் தனது மனைவியுடன் கலந்துகொண்டு, பெருமாள் ராஜகோபால சுவாமியை வழிபட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT