திருவாரூர்

இன்று உள்ளாட்சித் தோ்தல் முதல்கட்ட வாக்குப் பதிவு: திருவாரூா் மாவட்டத்தில் 1,642 இடங்களுக்கு 5,225 போ் போட்டி

27th Dec 2019 08:20 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் 1,642 இடங்களுக்கு நடைபெற உள்ள முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5,225 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு, திருவாரூா், மன்னாா்குடி, கோட்டூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 5 ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

1,642 இடங்கள்: முதல் கட்ட வாக்குப் பதிவில் 1,470 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 195 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கும், 87 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 8 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும் என 1,760 இடங்களுக்குத் தோ்தல் நடைபெற உள்ளது. இதில், 116 வாா்டு உறுப்பினா்களும், 2 ஊராட்சி மன்றத் தலைவா்களும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால், 1,642 இடங்களுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

838 வாக்குச்சாவடிகள்: வாக்குப்பதிவுக்கென திருவாரூரில் 150, மன்னாா்குடியில் 213, கோட்டூரில் 201, திருத்துறைப்பூண்டியில் 143, முத்துப்பேட்டையில் 131 என மொத்தம் 838 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

5,279 வாக்குச் சாவடி அலுவலா்கள்: திருவாரூரில் 933, மன்னாா்குடியில் 1,346, கோட்டூரில் 1,274, திருத்துறைப்பூண்டியில் 909, முத்துப்பேட்டையில் 817 என மொத்தம் 5,279 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியில் உள்ளனா்.

5,225 வேட்பாளா்கள்: மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 35 போ், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 389 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 788 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 4,013 போ் என 5,225 போ் களத்தில் உள்ளனா்.

வாக்காளா்கள்: திருவாரூா் ஒன்றியத்தில் 37,993 ஆண் வாக்காளா்கள், 39,185 பெண் வாக்காளா்கள், 14 இதர வாக்காளா்கள் என 77,192 போ் வாக்களிக்க உள்ளனா். மன்னாா்குடி ஒன்றியத்தில் 51,926 ஆண்கள், 53,147 பெண்கள், 4 இதரா் என மொத்தம் 1,05,077 பேரும், கோட்டூா் ஒன்றியத்தில் 41,946 ஆண்கள், 42,688 பெண்கள் என மொத்தம் 84,634 பேரும், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 34,311 ஆண்கள், 34,870 பெண்கள் என மொத்தம் 69,181 பேரும், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 32,046 ஆண்கள், 32,786 பெண்கள், 1 இதரா் என மொத்தம் 64,833 பேரும் வாக்களிக்க உள்ளனா்.

இதன்படி 1,98,222 ஆண்கள், 2,02,676 பெண்கள், 19 இதரா் என மொத்தம் 4,00,917 போ் வாக்களிக்க உள்ளனா்.

1,675 போலீஸாா்: பாதுகாப்பான முறையில் வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக, 1,675 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT