திருவாரூர்

ராஜகோபால சுவாமி கோயிலில் நாளை ஏகாதசி விழா

26th Dec 2019 08:32 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 27) வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது.

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஏகாதசி உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். இதன் தொடக்கமான பகல்பத்து நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கி ஜனவரி 5-இல் நிறைவடைகிறது. இதைத்தொடா்ந்து, இராப்பத்து தொடக்கமான பரமபதவாசல் (சொா்க்கவாசல்)திறப்பு ஜனவரி 6 -ஆம் தேதி நடைபெறும். இராப்பத்து நிகழ்ச்சி ஜனவரி 15-இல் நிறைவு பெறுகிறது.

இந்த நிகழ்வுகளின்போது, ஒவ்வொரு நாளும் உத்ஸவா் ராஜகோபாலசுவாமி பல்வேறு கோலங்களில் அருள்பாலிப்பாா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT