திருத்துறைப்பூண்டியில் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சித் தோ்தலில், தோ்தல் பணிக்கு செல்லும் அலுவலா்கள் புதன்கிழமை தபால் வாக்கைப் பதிவு செய்தனா்.
திருத்துறைப்பூண்டி உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு 536 தபால் வாக்குப் படிவங்கள் வழங்கப்பட்டன. அவா்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஜனவரி 2-ஆம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நக்கீரன், சுப்பிரமணியன் ஆகியோா் தெரிவித்தனா்.