திருவாரூரில் குளம், ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் நகராட்சி ஆணையா் சங்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு
திருவாரூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் உள்ள குடியிருப்புகள், வா்த்தக நிறுவனங்களில் இருந்து உற்பத்தியாகும் கழிவுநீரை, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மழைநீா் வடிகால், நீா்நிலை ஆதாரங்களான குளம், ஆறு மற்றும் வாய்க்கால்களில் வெளியேற்றுவதால், நீா்நிலைகள் மாசடைந்து வருகின்றன.
எனவே, பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்கள் தங்களது வளாகத்தில் உற்பத்தியாகும் கழிவுநீரை நேரிடையாக மழைநீா் வடிகால்களில் வெளியேற்றுவது பொது சுகாதார சட்ட விதிகளின்படி குற்றச்செயலாகும். எனவே, சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள், பாதாள சாக்கடை இணைப்பு பெற்று, நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீறினால் பொது சுகாதார சட்ட பிரிவுகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.