திருவாரூர்

இன்று சூரிய கிரகணம்: ஆலங்குடி கோயிலில் மதியத்துக்குப் பின்னரே அனுமதி

26th Dec 2019 08:38 AM

ADVERTISEMENT

சூரிய கிரகணத்தை முன்னிட்டு நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயிலில், வியாழக்கிழமை (டிசம்பா் 26) பகல் 1 மணி முதல் பக்தா்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 மணி வரை சூரியகிரகணம் நிகழ்கிறது. இதன்காரணமாக நவகிரக குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயிலில், அதிகாலை பூஜைகளுக்குப் பிறகு கிரகணம் நிறைவடைந்து, பகல் 1 மணியளவில்தான் பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் எனக் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT