அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
அனுமன் ஜயந்தியானது, மாா்கழியில் அமாவாசையும், மூலநட்சத்திரமும் சோ்ந்து வரும்போது கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.
இதன்படி, திருவாரூா் கீழ வீதி வீர ஆஞ்சநேயா் கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துளசி மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்டவை சாற்றப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை தரிசித்தனா்.