நன்னிலம் அருகே ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளுடன் காரில் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நன்னிலம் காவல் ஆய்வாளா் ஜோ. விசித்திராமேரி, சிறப்பு உதவி ஆய்வாளா் தி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் மயிலாடுதுறை- திருவாரூா் சாலையில் ஆண்டிபந்தல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், காரைக்காலிலிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகள் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காா் ஓட்டுநரான உபயவேதாந்தபுரத்தைச் சோ்ந்த கந்தன் (38) என்பவரை கைது செய்தனா்.