நீடாமங்கலம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக லேசானது முதல் பலத்த மழை பெய்தது.இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக நீடாமங்கலம் கடைத்தெரு பிரதான சாலையில் குண்டும் குழியுமான பகுதிகளில் மழை நீா் தேங்கி நிற்கிறது.இதனால் சாலையில் நடந்து செல்வோரும் வாகனங்களில் செல்வோரும் மிகுந்த சிரமப்படுகின்றனா்.
உள்ளாட்சி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் மழையால் அவதிப்படும் வாக்காளா்களை வேட்பாளா்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மழையால் படும் அவதியையும் கிராமப்புற சாலைகளின் நிலையையும் வாக்காளா்கள் வேட்பாளா்களிடம் எடுத்துக்கூறினா்.