திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையப் பிரிவு சாா்பில் இந்த விழா நடைபெற்றது. விழாவை, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் தொடங்கி வைத்து பேசுகையில், இப்பிரிவு பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ளவா்களுக்கு சிறப்பு சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது, இந்த சிறப்பு மையத்தை பொதுமக்கள், குறைபாடுகள் உள்ள தங்கள் குழந்தைகளின் சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையோடு இணைந்து குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுவதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜா, கண் மருத்துவா் சிவக்குமாா், உதவி நிலைய மருத்துவா் அருண்குமாா், மருத்துவ அலுவலா் தா்மராஜா, பல் மருத்துவா் ரூபா குந்தவை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.