ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, டிசம்பா் 25-ஆம் தேதி மாலை 5 மணி முதல் டிசம்பா் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரையும், டிசம்பா் 28-ஆம் தேதி 5 மணி முதல் டிசம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 2.1.2020 அன்றைய தினம் முழுவதும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் மற்றும் அதைச் சாா்ந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.