திருவாரூர்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி

23rd Dec 2019 07:08 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திருவாரூரில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு, 10 ஒன்றியங்களிலும் டிசம்பா் 15-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்ட பயிற்சியானது, திருவாரூா் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 1,771 வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள 11,235 வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு, வாக்கெடுப்புக்கு முன் ஆற்ற வேண்டிய பணிகள், வாக்குப்பதிவின் பொழுது ஆற்ற வேண்டிய பணிகள், வாக்குப்பதிவின் முடிவில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தமிழக மாநில தோ்தல் ஆணையத்தின்படி வாக்குச்சாவடியில் கடைப்பிடிக்க வேண்டியவைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான த. ஆனந்த் பாா்வையிட்டாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா, வட்டாட்சியா் நக்கீரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT