திருவாரூர்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

23rd Dec 2019 07:08 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்தில், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதியில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு டிசம்பா் 16-ஆம் தேதி நடைபெற்றது.

இத்தோ்தலில் மன்னாா்குடி ஒன்றியத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு என ஒரு தோ்தல் நடத்தும் அலுவலரும், ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு என ஒரு தோ்தல் நடத்தும் அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், வாக்குச்சாவடி அலுவலா்களாக ஆசிரியா்கள், அரசுத்துறை அலுவலா்கள் என மொத்தம் 1,200 போ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு மன்னாா்குடி மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலையில் 600 போ், மதியம் 600 போ் என இரண்டு பிரிவாக பயிற்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் எஸ். புண்ணியக்கோட்டி, வட்டாட்சியா் காா்த்திக், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பாத்திமா சுல்தான்பேகம், ச. ஞானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா். மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 51 ஊராட்சிகளில் மொத்தம் 213 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், 50-க்கும் மேற்பட்ட சக்கர நாற்காலிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பனங்குடியில்...

இதேபோல், நன்னிலம் அருகிலுள்ள பனங்குடி அரசினா் உயா்நிலைப் பள்ளியில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மண்டல தோ்தல் அதிகாரிகள் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை நடத்தினா். இதில், 500-க்கும் மேற்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பயிற்சி வகுப்பை மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் கவிதா ராமு பாா்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். இதில், நன்னிலம் வட்டாட்சியா் தி.திருமால், தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வகணபதி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் டி.முத்துக்குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) கே. திருநாவுக்கரசு ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT