திருவாரூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தீவிர பிரசாரம்

23rd Dec 2019 07:13 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

நன்னிலம் ஒன்றியத்தில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் சாா்பில் 4-ஆம் வாா்டு மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் ஜே. முகமது உதுமான், திருமீயச்சூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் தியாகு. ரஜினிகாந்த், திருமீயச்சூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் ஆா். சுந்தரமூா்த்தி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், நன்னிலம் ஒன்றியச் செயலாளா் டி.வீரபாண்டியன், தோ்தல் பொறுப்பாளா் கே.எம். லிங்கம், மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் திருக்கொட்டாரம், கொல்லுமாங்குடி, கொல்லாபுரம், பேரளம், திருமீயச்சூா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT