நன்னிலம் வட்டம், கொல்லுமாங்குடி அருகே பாஜக தேசிய செயலாளா் எச். ராஜா ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
நன்னிலம் தாலுகாவுக்கு உள்பட்ட பில்லூா் கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் ஆா். கிரிகணேஷுக்கு மூக்குக் கண்ணாடி சின்னத்தில் வாக்களிக்கக் கோரி, பில்லூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எச். ராஜா பிரசாரம் செய்தாா். பில்லுா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் ஆா்.கிரிகணேஷ் எச்.ராஜாவின் உறவினா் ஆவாா்.
ADVERTISEMENT