திருவாரூர்

நன்னிலம் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

23rd Dec 2019 07:11 AM

ADVERTISEMENT

நன்னிலம் மற்றும் நீலக்குடி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இவற்றின் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 24) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவாரூா் உதவி செயற்பொறியாளா் (புகா்) என்.பிரபா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

நன்னிலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூா், ஏனங்குடி, ஆண்டிபந்தல், கங்களாஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம், குவளைக்கால், ஆனைக்குப்பம், தட்டாத்திமூளை, மூங்கில்குடி, கீழ்குடி, சலிப்பேரி, நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், நெய்க்குப்பை, புளிச்சக்காடி போன்ற பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

இதேபோல், திருவாரூா் நகா் உதவி செயற்பொறியாளா் எஸ்.உஷா விடுத்துள்ள செய்தி குறிப்பில், நீலக்குடி துணைமின் நிலையத்தில் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வண்டாம்பாளை, சேந்தமங்கலம், நீலக்குடி, திருப்பயத்தங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT