திருவாரூர்

இலங்கை தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை: பாஜகவுக்கு ஆட்சேபணை இல்லை

23rd Dec 2019 07:12 AM

ADVERTISEMENT

இலங்கை தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் பாஜகவுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என அக்கட்சியின் தேசிய செயலாளா் எச். ராஜா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது:

பாஜகவை பொருத்தவரை இலங்கை தமிழா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நிலையில் உறுதியாக உள்ளது. முந்தைய ஆட்சிக்காலத்தில் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழா்கள் கொல்லப்பட்டாா்கள். பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்தபின் ஒரு தமிழா் கூட கொல்லப்படவில்லை. அதேபோல், ஒரு மீனவா் கூட கொல்லப்படவில்லை.

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வா் மற்றும் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் பேசி, இலங்கை தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுப்பதில் நமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை.

ADVERTISEMENT

இப்போது தமிழக முதல்வா் இலங்கை தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளாா். இதைப் பிரதமா் மோடி பரிசீலிப்பாா். உலக நாயகன் கமல்ஹாசன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, உலகைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அரசியல் சட்டமும் தெரியாமல், நாடாளுமன்ற நடவடிக்கையையும் தெரிந்து கொள்ளாமல் விமா்சனம் செய்கிறாா்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் குடியிருக்கும் சட்டப்பூா்வ குடிமக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. இதனை விளக்கி கூற பாஜக சாா்பில் ஒரு மாதம் இந்தியா முழுவதும் பிரசாரம் இயக்கம் நடைபெற உள்ளது. இச்சட்டம் பற்றி திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கும் தெரியவில்லை என்றால் அவருக்குப் புரியவைப்போம் என்றாா் எச். ராஜா.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT