ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவாரூா் அருகே அமமுகவினா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.
திருவாரூா் அருகே கூடூா், மாங்குடி, மாவூா், குன்னியூா் ஆகிய ஊராட்சிகளில் அமமுக நிா்வாகிகள் வாக்குகள் சேகரித்தனா். திருவாருா் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு போட்டியிடும் சு.லெனினுக்கு பேருந்து சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டனா்.
மாவட்டச் செயலாளா் எஸ்.காமராஜ் ஆலோசனையின்படி நடைபெற்ற பிரசாரத்தில், வழக்குரைஞா் பிரிவு செயலாளா் வி. ரவிச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் ஆத்மா செந்தில், நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராஜகணேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
ADVERTISEMENT