திருவாரூர்

விளம்பரதாரா் செய்தி அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் பிரசாரம்

16th Dec 2019 10:14 PM

ADVERTISEMENT

நன்னிலம்: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, நன்னிலம் பகுதியில் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

நன்னிலம் பகுதியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவிக்குப் போட்டியிடும் விஜயலட்சுமி, இராம.குணசேகரன், சிபிஜி. அன்பு, குவளைக்கால் இராமநாதன் மற்றும் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களுக்கும் ஆதரவு கேட்டு அமைச்சா் ஆா். காமராஜ் திங்கள்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட மாப்பிள்ளைக்குப்பம் மாரியம்மன் கோயிலில் வழிபட்ட பின்னா், பிரசாரத்தை தொடங்கி, அமைச்சா் பேசியது:

நன்னிலம் பகுதியைப் பொருத்தவரையில் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சாா்ந்த மாணவா்கள் படிப்பதற்காக அதிமுக ஆட்சியில் அரசு கலைக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. நன்னிலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதனால், தமிழக மக்கள் அதிமுக ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளாா்கள். எனவே, ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்றாா் அமைச்சா்.

இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் குடவாசல் தினகரன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சம்பத், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, நன்னிலம், மாப்பிள்ளைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் பிரசாரம் மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT