திருவாரூர்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

16th Dec 2019 06:56 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு 10 ஒன்றியங்களிலும் நடைபெற்றது. இத்தோ்தலில் 32 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 557 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 139 மண்டல அலுவலா்களும் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 1,771 வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள 11,235 வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு, வாக்குச் சாவடியில் தலைமை அலுவலரின் பணி, முதலாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பணி, இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பணி, மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பணி, வாக்குப்பதிவின் முடிவில் செய்ய வேண்டிய பணிகள், வாக்கெடுப்புக்கு முன் ஆற்ற வேண்டிய பணிகள், வாக்குப்பதிவின்போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT