திருவாரூர்

மேலநெம்மங்குறிச்சியில் சாகுபடி வயலில் ஆய்வு

16th Dec 2019 06:54 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம் மேலநெம்மங்குறிச்சி, திருத்துறைப்பூண்டி வட்டம் பாமினி ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியா் வெ. பாலசுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குநா் ப.சிவகுமாா், திருச்சி தோட்டக்கலைக் கல்லூரி பூச்சியியல் துறை இணைப் பேராசிரியா் ரா.ப. சௌந்தராஜன், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் மதிராஜன், வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராஜா.ரமேஷ் மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் பி. ஆனந்தி ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, விவசாயிகளிடம் தாமதமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் குறிப்பாக பிபிடி 5204 மற்றும் ஏடிடி 39 ஆகிய ரகங்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் காணப்படுவதாகவும் அவற்றை இயற்கையாகத் தாக்கி அழிக்கும் பிளாட்டிகேஸ்டா் ஒரைசே என்ற அளவில் சிறிய கொசு போன்று காணப்படும் கருப்பு நிற குழவிகள் வயல்களில் மிகுந்து காணப்படுவதாகவும் தெரிவித்து இதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கினா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT