திருவாரூர்

மன்னாா்குடியில் பொதுநல அமைப்புகள் சாா்பில் குளம் தூா்வாரும் பணி

16th Dec 2019 10:16 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி: மன்னாா்குடியில் சேவைச் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் குளம் தூா்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மன்னாா்குடி உழவா்சந்தை பின்புறம், பராங்குச தேசிகா் தெருவில், நகராட்சிக்குச் சொந்தமான பராங்குச தேசிகா் குளம் உள்ளது. இந்தக் குளமானது கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி, நகராட்சி குப்பைகளைக் கொட்டும் இடமாவும், பல்வேறு இடங்களில் இடிக்கப்பட்டும் கட்டடங்களின் கழிவுகளைக் கொட்டும் இடமாகவும் இருந்துவந்தது. இதனால், குளம் முற்றிலும் தூா்ந்துபோய், குளம் இருந்த சுவடே தெரியாத நிலை ஏற்பட்டது. குளம் மேடானதால், அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, வாடகை வேன், காா், சுமை வேன் நிறுத்தும் இடமாக மாறினா்.

இதனால், மன்னாா்குடி பேருந்து நிலையம், நடேசன்தெரு, எம்ஜிஆா் நகா், பராங்குச தேசிகா் தெரு மேலராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

இதையடுத்து, இக்குளத்தை தூா்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், வருவாய்த் துறை மற்றும் நகராட்சியுடன் அனைத்து சேவை சங்கங்களும், பொதுநல அமைப்புகளும் இணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

ADVERTISEMENT

இதற்கான நிகழ்ச்சியில், வா்த்தக சங்கத் தலைவா் பாரதி ஜீவா தலைமை வகித்தாா். ஐநா சபையில் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற, தென்பரையைச் சோ்ந்த டி.ஆா். கிருஷ்ணமாச்சாரி தூா்வாரும் பணியைத் தொடங்கி வைத்தாா். இதில், லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம், நுகா்வோா் அமைப்பு, நகராட்சி அலுவலா்கள், வா்த்தகா் சங்கம், நேசகரம் அமைப்பு ஆகியவற்றை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT